திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பக்தர் பேரவை சார்பில் கூட்டு வழிபாடு நடந்தது.நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் நெல்லையப்பர் கோயில் ஆறுமுக நயினார் சன்னதியில் கூட்டுவழிபாடு நடந்து வருகிறது. நேற்று 25வது வார கூட்டு வழிபாடு நெல்லையப்பர் கோயிலில் நடந்தது. குமரி மாவட்டம் விவேகானந்தா ஆசிரமம் சைதன்யானந்தா சுவாமிகள் ஆசியுரையுடன் கூட்டு வழிபாடு துவங்கியது. நடேசன் தலைமை வகித்தார். நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெல்லை டவுன் உதவி கமிஷனர் லோகநாதன், இந்து ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பு செயலாளர் சுதாகர் ஆகியோர் பேசினார். நெல்லை டவுன் ஆவுடையப்பன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து திருமுறைபாராயணம், பஜனை பாடல்கள், தியானம், கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதில், ஆன்மிக பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.