திருப்பதி மலைக்கோயிலில் இருந்து ஒருகி.மீ., தொலைவில் உள்ளது சிலாதோரணம் என்னும் கல் பந்தல். பாறை படிமத்தால் ஆன இந்த தோரணம் இயற்கையாக அமைந்தது. பந்தல் போல அமைந்திருப்பதால் இப்பெயர் உண்டானது. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்த பெருமாள் இங்கிருந்த புற்றில் தான் சீனிவாசனாக இருந்தார். அவர் வெயில், மழையால் பாதிக்கப் படாமல் இருக்க இயற்கையே இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தியாகவும் சொல்வர். 25 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட இப்பாறைப் படிமத்தில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடாழ்வார், தேவலோக யானையான ஐராவதம் ஆகிய உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆசியா கண்டத்தில் இயற்கையாக அமைந்த பாறைப்பந்தல் இது மட்டுமே.