திருப்பதி ஏழுமலையானின் இடது மார்பில் பத்மாவதி தாயார் வீற்றிருப்பதாக ஐதீகம். திருப்பதி செல்பவர்கள். முதலில் திருச்சானூர் சென்று தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இங்கு கார்த்திகை மாதம் பிரம்மோற்ஸவம் நடக்கும். விழாவின் கடைசிநாளன்று ஏழுமலையான் கோயிலில் இருந்து கூரைப்புடவை, மலர் மாலைகள், ஆபரணங்கள் யானைமேல் மேளதாளத்துடன் திருச்சானூர் கொண்டுவரப்படும். அவற்றை அணிந்தபடி தாயார் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். உலக நன்மைக்காக பிரம்மா ஏற்றி வைத்த இரு தீபங்கள் இக்கோயிலில் உள்ளன.