பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
திண்டுக்கல் : நவராத்திரியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் 23 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சண்டி ஹோமம், கோட்டை மாரியம்மன் கோயிலில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் 23 வது ஆண்டு சண்டி ஹோமம் சிவாச்சாரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. தேவிமாத்மியம் எனப்படும் 700 ஸ்லோகங்கள், 10 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் பாராயணம் செய்யப்பட்டது. அசுரர்களை சம்ஹாரம் செய்தது, பாராக்கிரமங்கள் புரிந்தது, பக்தர்களை காத்ததற்காக அம்பாளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஹோமம் நடத்தப்பட்டது. சிவனடியார்கள், சுமங்கலிகள், கன்னி பெண்கள் என தலா 9 பேருக்கு மங்கல பொருட்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அபிராமி அம்மன் கோயில் தலைமை குரு கல்யாண சுந்தரம், உதவி குரு பாலாஜி, பழநி பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கரன் கோயில், மதுரை, நத்தம் பகுதியிலிருந்து வந்திருந்த குருக்கள், ஹோமத்தில் பங்கேற்றனர். முன்னதாக பைரவர்கள், யோகினிகளுக்கான வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதற்காக உப்பில்லாத வடை, தயிர் சாதம் நைவேத்தியம் செய்யப்பட்டு வானில் உலா வரும் தேவதைகளுக்கு வினியோகிக்கப்பட்டது.