பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள மட்டவரை மாவிலிங்கை ஸ்ரீபடைவெட்டி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, ரத்தோற்சவ திருத்தேர் திருவிழா நேற்று காலை, 10.30 மணிக்கு நடந்தது. தேர் திருவிழாவையொட்டி அக்., 4ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம், கொடியேற்றம், அன்று இரவு அன்னவாகனம், 5ம் தேதி கருடவாகனம், 6ம் தேதி மயில்வாகனம், 7ம் தேதி சிம்மவாகனம், 8ம் தேதி ரிஷப வாகனம், 9ம் தேதி கஜ வாகனம், 10ம் தேதி சேஷவாகனம், 11ம் தேதி சப்பரம், 12ம் தேதி குதிரை வாகனம் ஆகிய, வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, 10.30 மணியளவில் ரத்தோற்சவம் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, வெகு சிறப்பாக நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஊஞ்சல் உற்சவமும், இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.