பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
பெரம்பலூர்: தீரன்நகர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோவிலில், சரஸ்வதி பூஜை கோலகாகலமாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் அருகே துறைமங்கலம் தீரன் நகர் பகுதியில் உள்ள, ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோவிலில், நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒவ்வொரு நாளும் துர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி வேடமிட்ட குழந்தைகள், கொலு முன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். கடைசி நாளான நேற்று சரஸ்வதி பூஜை விழாவையோட்டி, சரஸ்வதி வேடமிட்டுகொலுவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, பக்தர்கள் சந்தனம், குங்குமம் வைத்து, குழந்தைகளை அம்மனாக பாவித்து, காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர். விழாவில் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கலியபெருமாள், வக்கீல் பாலசுப்ரமணியம், வருவாய்த்துறை அதிகாரி மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாய்ராம் அய்யப்பன், ரெங்கராஜ், கல்யாணி, ராஜீ, காந்தி ஆகியோர் செய்திருந்தனர்.