பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
திருத்தணி: மத்துார், மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், கடந்த, 5ம் தேதி முதல் நவராத்திரி திருவிழா துவங்கியது. கோவில் வளாகத்தில் கொலு வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழா, நாளையுடன் முடிவடைகிறது. நேற்று காலை, 7:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, தேங்காய் பூ அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், மத்துார் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.