பதிவு செய்த நாள்
17
அக்
2013
10:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தனக்குளத்தில் வெங்கலமூர்த்தி அய்யனார் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இத்திருவிழாவிற்காக 8 அடி உயர பெரிய கருப்பசாமி, 6 அடி உயர சின்னகருப்பசாமி, 6 அடி ராக்காயி அம்மன், 4 அடி பேச்சி, கருப்பாயி அம்மன், 5 அடி அய்யனார், 4 அடி குதிரைகள், வேடன், வேடச்சி, நாகர் ஆகிய களிமண் சிலைகள் விளாச்சேரியில் தயாரிக்கப்பட்டன. நேற்று முன் தினம் சிலைகளுக்கு பூஜைகள் முடிந்து ஊர்வலமாக தனக்கன்குளம் எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு வர்ணம் தீட்டப்பட்டு, கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று சுவாமி பெட்டி எடுக்கும் விழா முடிந்து, மந்தை திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட நான்கு சப்பரங்களில் சுவாமிகளை எழுந்தருள செய்தனர். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் சப்பரங்கள் வெங்கல மூர்த்தி அய்யனார் கோயில் சென்றடைந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.