ஐõர்கண்ட் மாநிலத்தில் ராஜ்ரப்பா என்ற ஊரில் தாமரை மலரில் தலையில்லாத உடைலுடன் சயனித்திருக்கும் ரதி, மன்மதன் மீது ஒரு காலைத் தூக்கி வைத்திருக்கும் நிலையில் காட்சியளிக்கிறாள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பொலாவி ராஜராஜேஸ்வரி அம்மன் மூலிகை மருந்துகளால் உருவாக்கப்பட்டவள். அவளின் திருப்பாதங்களுக்கிடையே மயிலையும், அங்குள்ள பத்ரகாளியின் பாதத்துக்கருகில் நரியையும் காணலாம்.