நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மெயின்ரோடு வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் முடிவதையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த விமானம் பாலஸ்தாபன பூஜை நடந்தது. சிறப்பு யாகம், தீபாராதனை முடிந்து திருப்பணி துவங்கியது. பூஜைகளை முருகானந்தம், முருகன் குருக்கள் செய்தனர். பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடனசபாபதி, சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.