ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் இன்று (18ம் தேதி) பவுர்ணமி யாகவேள்வி பூஜைகள் நடக்கிறது. ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் ராமநதி ஆற்றின் கரையில் அக்னி தீர்த்தக்கரை உள்ளது. இங்கு அக்னி தீர்த்தமும், பாலசுப்பிரமணியசுவாமி கோயிலும் சத்குருநாதர் சுவாமி தவபாலேஸ்வரர் ஜீவசமாதி பீடமும் உள்ளது. இங்கு இன்று (18ம் தேதி) பவுர்ணமி யாகவேள்வி பூஜைகள் காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், மகா மிருத்யுஞ்ஜெய ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. பகல் 12 மணியளவில் அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடக்கிறது. யாகபூஜைகளை குமார் சாஸ்திரிகள் நடத்துகிறார். ஏற்பாடுகளை பவுர்ணமி யாகவேள்வி பூஜை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.