எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேதஎட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் சவுமிய பிரதோஷ விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மாலை மகாகணபதி புஜையுடன் சவுமியாபிரதோஷ விழா துவங்கியது. பருவமழை தப்பாமல் பெய்ய வேண்டி மகாசங்கல்பம் நடந்தது. புண்ணியாவாஜனம் கலச ஆவாகனம், பஞ்சசுத்தஜெபம், பாராயணம், ருத்திரசுத்த ஹோமம், திரவியகுதி பூர்ணாகுதி நடந்தது. அதிகார நந்திபகவானுக்கும் எட்டீஸ்வரமூர்த்திக்கும் பெரிய நந்தீஸ்வரருக்கும் 21 வகையான அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோமசூத்ர பிரதட்சண வழிபாடு செய்தனர். சுவாமிஅம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆனந்த தாண்டவ நடராஜன் சன்னதி முன்பு இரண்டாவது சுற்றில் சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு பன்னீர் அபிஷேகம் நடந்தது. பருவமழை பெய்ய வேண்டி பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். சுவாமி நந்தீஸ்வரருக்கும் ஏக கால சிறப்பு தீபாராதனை நடந்தது.