விழுப்புரம்: மேல்மலையனூர் வளத்தி காளிகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கடம் புறப்பாடும், 10.45 மணிக்கு கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடை பெற்றது. தொடர்ந்து அம்மன், நவக்கிரகங்கள், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு பாலாபி ஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் பழனி மற்றும் விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.