Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை ... திருவண்ணாமலையில் ‘மஹா தீபம்’ ஏற்றம்; ஜோதியாய் ஜொலித்த ஈசன்.. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் திருவண்ணாமலையில் ‘மஹா தீபம்’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணை மலையாக்கும் விநோத கார்த்திகை திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மண்ணை மலையாக்கும் விநோத கார்த்திகை திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

03 டிச
2025
05:12

மேலூர்; நரசிங்கம்பட்டியில் திருகார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரக் கோயிலில் நடந்த மண்பிடி திருவிழாவில் நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி தெற்கு தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன் உள்ள ஓடையில் புனித நீராடினர்.பிறகு அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபாடு செய்தனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இப் மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்திகடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி வந்து முடி காணிக்கை செலுத்தினர். இதேபோல் மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் அருவாளை காணிக்கையாக செலுத்தினர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar