மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கடவாசல் கிராமத்தில் வரதராஜ பெ ருமாள் கோவில் உள்ளது. அக் 18 மாலை பூஜை செய்வதற்காக பட்டாச்சாரி யார் சத்தியநாராயணன் கோவிலுக்கு சென்றுள்ளளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கோவில் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த சத்தியநாராயணன் கோவிலுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த தலா 1அடி உயரம் உள்ள வெண்கலத்தால் ஆன வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயர் சிலைகளை கானவில்லை. தகவலறிந்த சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு மற்றும் புதுப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளன ர். கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சிலைகளை கொள்ளையடித் து சென்ற சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.