Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ... ஏகனே.. அனேகனே.. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் குவிந்தனர் ஏகனே.. அனேகனே.. திருவண்ணாமலையில் பரணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை மகா தீபம்: குவியும் பக்தர்கள்.. களை கட்டியது திருவண்ணாமலை
எழுத்தின் அளவு:
கார்த்திகை மகா தீபம்: குவியும் பக்தர்கள்.. களை கட்டியது திருவண்ணாமலை

பதிவு செய்த நாள்

02 டிச
2025
04:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை யொட்டி, சுவாமி சன்னதி முன் கோவில் இரண்டாம் பிரகாரத்தில், பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட  மூன்று ஆயிரம் கிலோ  பூக்களால் அலங்காரம்  செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை நடக்கவுள்ள மஹா தீப திருவிழாவை முன்னிட்டு, 25 ஏக்கர் பரப்பளவிலுள்ள  கோவில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இவை, 20 கி.மீ., தொலைவு  வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. மேலும், கோவில் கொடிமர வளாகம் மற்றும் இரண்டாம் பிரகாரம், கிளி கோபுர நுழைவாயில் ஆகியவற்றில் வாழை மரங்கள், இளநீர் குலைகளால் அலங்கரிக்கப்படும்,  பல்வேறு  வண்ண ரோஜாக்கள், சாமந்தி பூ தோரணம்,  பன்னீர் கரும்பு தோரணம் என, இரண்டாம் பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளா காட்சியாக உள்ளன. கோவில் கொடிமர நுழைவாயிலில், இரண்டு நந்தியம்பெருமானுக்கு நடுவில் சிவலிங்கம் உள்ளது போல், வண்ண மலர் தோரணங்கள் கட்டப்பட்டு, அதன்மேல் மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி, காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ண ரோஜா, சாமந்தி பூக்களால்  தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar