கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பூர்த்தி விழா அக் 18 காலை 10 மணிக்கு நடந்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 5 நாட்களாக பவித்ர உற்சவம் நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு பவித்ர மாலை கள் பூஜை செய்து, யாகம் நடந்தது. அக் 18 காலை பவித்ர உற்சவம் பூர்த்தி விழா நடந்தது. அதையொட்டி காலையில் சுப்ரபாத சேவை, கோ பூஜை, விஸ்வரூப தரிசனத்திற்கு பின், பெருமாள் தாயார் உபயநாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து பவித்ர மாலைகளை சாற்றி பூஜைகள் செய்தனர். தேசிய பட்டர் குழுவினர் பவித்ர உற்சவத்தை நடத்தினர்.