பதிவு செய்த நாள்
19
அக்
2013
11:10
தலைவாசல்: தலைவாசல் அருகே, கோவில் வேப்ப மரத்தின் நடுவில், "அம்மன் உருவம் தோன்றியதால், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.தலைவாசல் அருகே, வி.கூட்ரோடு - ஆறகளூர் சாலையோரம், ஆட்டுப்பண்ணை வளாகத்தில், தாய்மடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், ஆறு அடி உயரத்தில் புற்று வளர்ந்து வருவதால், அதன் மடி மீதுள்ள விநாயகரை, தாய்மடி விநாயகர் எனக்கூறப்படுகிறது.கோவில் முன் உள்ள வேப்ப மரத்தின் நடுவில், நான்கு மாதங்களுக்கு முன், திடீரென பிளவு ஏற்பட்டு, "அம்மன் உருவம் தோன்றியது. அக் 18, ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, கோவிலில் மிளகாய் யாக பூஜை நடந்தது.அப்போது, பெண்கள் பலருக்கு அருள் வந்து, "கும்பகோணம் அய்யாவாடியில் உள்ள ஸ்ரீபிரித்தியங்கிரா தேவி அம்மன் நான். ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், கால பைரவரை வழிபாடு செய்ய வந்து இங்கு குடிகொண்டேன் எனக் கூறினர்.அதையடுத்து, பொதுமக்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.