தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2013 10:10
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில் பித்தளை சப்பரத்தில் பாகம்பிரியாள் அம்மன் திருவீதி உலா வந்தது.தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயிலில் (சிவன் கோயில்) நடக்கும் திருவிழாக்களில் முதன்மை பெற்று விளங்கும் திருவிழாவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஒன்றாகும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலையில் மகா கணபதிஹோமம், பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரதவீதி வழியாக உலா வருதல் நடந்தது. அதனை தொடர்ந்து பாவான அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணைப்பிளக்க கொடியேற்றப்பட்டது.நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், அர்ச்சகர் செல்வம்பட்டர் மற்றும் மண்டபடிதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்திற்கு பின்னர் கொடிகம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் உற்சவ பாகம்பிரியாள் வீதி உலா வருதல் நடந்தது.வரும் 29ம் தேதி தேரோட்டம், 30ம் தேதி பூம்பல்லக்கு, 31ம் தேதி திருக்கல்யாண திருவிழா நடக்கிறது.