ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வெங்கடேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத கருட சேவை நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆஞ்சநேயர், லெட்சுமிநரசிம்மர், கருடர் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இங்கு ஐப்பசி மாதம் நடந்த கருடசேவை விழாவில் காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், விசேஷ அபிஷேகம், சிறப்பு தீபாராதனையை கட்டளைதாரர் செந்தில்பட்டர் குடும்பத்தினர் முன்னிலையில் ரெங்கநாதஐயங்கார், சம்பத்குமார் ஆகியோர் நடத்தினர். மாலையில் சாயரட்சை, தீபாராதனை, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.