மடத்துக்குளம்: கண்ணாடிப்புத்தூர் சிவன்கோவிலில், புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. மடத்துக்குளம் அருகே கண்ணாடிபுத்தூர் அமராவதி ஆற்றங்கரையில் கல்யாணி அம்மன் உடனமர் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியன்று அன்னாபிஷேக விழா நடந்தது. மாலை 4.00 மணிமுதல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், மாலை 5.00 மணிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.மாரப்பகவுண்டன்புதூரில் மனுநீதிநாள் முகாம் பொள்ளாச்சி · மாரப்பகவுண்டன் புதூரில் இன்று நடக்கும் மனுநீதிநாள் முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வருவாய்த்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். பொள்ளாச்சி வருவாய்த்துறை தாசில்தார் சுமகுமாரி வெளியிட்ட அறிக்கையில், "பொள்ளாச்சி வட்டம் மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டம் மாரப்பகவுண்டன் புதூர் கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று (23ம் தேதி) மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தலைமை வகிக்கிறார். காலை 10.00 மணிக்கு முகாம் துவங்குகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகவும், மனுக்களாகவும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.