ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் புதுத்தெருவில் அமைக்கப்பட்ட, ராகவேந்திரா பிருந்தாவனம் திறப்பு விழா யொட்டி, காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. பின், மந்திராலய மடத்தின் பீடாதிபதி 1008 சுயதீந்திர தீர்த்த சுவாமி, இளைய பீடாதிபதி 1008 சுபுதீந்திர தீர்த்த சுவாமிகள் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து, பிருந்தாவனத்தை பிரதிஷ்டை செய்தனர். இதனைதொடர்ந்து, இங்கு பக்தர் தங்கி பூஜை, வழிபாடு செய்து, ராகவேந்திரா சுவாமியை தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை மந்திராலய ராகவேந்திரா சுவாமி மடத்தினர் செய்திருந்தனர்.