இந்திரவிழா என்ற நிகழ்ச்சி முன்பு எல்லா ஊர்களிலும் நடந்துள்ளது. சங்ககாலம் தொட்டு இது இருந்தது. மேகங்களுக்கு அதிபதியான இந்திரனை போற்றி குறித்த காலத்தில் பருவமழை பெய்யவும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த விழா நடத்தப்பட்டது. இதை பொங்கலன்றும், சித்ரா பவுர்ணமியன்றும் கொண்டாடினார்கள். இதை மீண்டும் எல்லா ஊர்களிலும் மக்கள் கொண்டாட வேண்டும். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியிடம் வேண்டி தங்கத்தாலியை கடலில் போட்டால், புயல் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கை இன்றும் இருக்கிறது. சரபேஸ்வரரை வழிபட்டு இயற்கைச் சீற்றத்திலிருந்து தப்பலாம்.