கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் கருவ றையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் உலாவிய பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூஜை நடத்த கோவில் நிர்வாகி குமார் கருவறை கதவை நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் திறந்த போது உள்ளே 6 ஆடி நீளமுள்ள பாம்பு இருந்தது. இதனையடுத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கருவறைக்குள் சுவாமி சிலையை சுற்றி உலாவியது. இதனால் பூஜைக்கு வந்த பக்தர்கள் பலர் ஆச்சரியத்துடன் சுவாமியை வழிபட்டனர். பின்னர் கருவறை சாளரம் வழியாக 8:30 மணியளவில் வெளியேறியது. இச்சம்பவம் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.