வரசித்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2013 10:10
திண்டிவனம்: திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு கடந்த செப்., 11 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தினம் மண்டலாபிஷேக பூஜை நடந்தது. இதன் நிறைவு விழாவும், கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ள பரிவாரமூர்த்திகள் பாலமுருகர், ஆதிபராசக்தி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா, பிரம்மா, நாகாத்தம்மன், நவகிரகங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேக விழாவும் நடந்தது. கடந்த 29ம் தேதி மாலை கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 10 மணிக்கு, சன்னதிகளுக்கு புனித கலச நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. விநாயக பெருமானுக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.