பதிவு செய்த நாள்
31
அக்
2013
10:10
விழுப்புரம்: சுவாமி விவேகானந்தர் 150வது ஆண்டு விழாவையொட்டி விழுப்புரத்தில் ரத யாத்திரை நடந்தது. விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் புறப்பட்ட ரதயாத்திரையை ஆர்.டி.ஓ., அனுசுயாதேவி, சுவாமி கமலாத்மானந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நகராட்சி சேர்மன் பாஸ்கரன், ராம கிருஷ்ணா கல்விக் குழும செயலாளர் பழனிவேலு, பொருளாளர் லோகையன் முன்னிலை வகித்தனர். சுவாமிகள் பத்மஸ்தானந்தர், சத்யஞானானந்தர் தலைமையில் பேரணி புறப்பட்டு, அரசு மருத்துவமனை, வடக்குத் தெரு, திரு.வி.க., சாலை வழியாக அரசு மகளிர் மேல்நிலை பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் இ.எஸ்., கல்விக் குழு தலைவர் சாமிகண்ணு, வி.பி.எஸ்., பள்ளி தாளாளர் செந்தில், சாரதா வித்யாலயா பள்ளி தாளாளர் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், ராமகிருஷ்ணா பள்ளி முதல்வர் பாட்சா, சுவாமி விவேகானந்தா அறிவியல் கல்லூரி தாளாளர் தியாகராஜன், புரொபஷனல் கூரியர் மேலாளர் தியாகராஜன், வி.இ.டி., கல்லூரி தனபால், ஆடிட்டர் ராஜேஷ்குமார், என்.டி.ஆர்., சிவஜோதி டைல்ஸ் உரிமையாளர் தங்க சேகர், கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் ராஜூலு, சண்முகம் ஜூவல்லரி பாலமுருகன், கிருஷ்ணா டிரேடர்ஸ் தணிகைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.