பூதப்பாண்டி: பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில் திருக் கல்யாண மகோத்ஸவ விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு சிவகாமி அம்பாள் அழகிய மணவாளப்பெருமாள் கோவிலுக்கு பல்லக்கில் எழுந்த ருளும்.மாலை 4 மணிக்கு அம்பாளுக்கு பட்டும் மாலையும் பல்லக்கில் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். மாலை 5 மணிக்கு பூதலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் மாலை மாற்றும் வைபவத்திற்காக பெருமாள் கோவில் எழுந்தருளும். 5.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பெருமாள் கோவிலுக்கு முன்பாக மாலை மாற்றிக் கொள்ளும். 6.30 மணிக்கு சிவகாமி அம்பாள் கதிர் குளிக்க விதி எழுந்தருளும். 7 மணிக்கு சீர்வரிசை தட்டுகள் ஏந்திய பக்தர்கள் அழகியமணவாள பெருமாள் கோவிலுக்கு வருதலும், 7.30 மணிக்கு கொடிமரம் முன்பாக அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். 8.15 மணிக்கு திருக்கல்யாண பஜனை மற்றும் சடங்குகள் தொடங்கும். 8.30 மணிக்கு திருமாங்கல்யதாரண முகூர்த்தம் நடைபெறும். 8.45 மணிக்கு பட்டின பிரவேசம், சுவாமியும் அம்பாளும் விதி எழுந்தருளும். 9 மணிக்கு பள்ளி அறை வைபவம் தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பூதலிங்க சாமி பக்தர் பேரவையினர் செய்துள்ளனர்.