பதிவு செய்த நாள்
04
நவ
2013
10:11
தர்மபுரி: கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், இரு பிரிவினர் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது.தர்மபுரியை அடுத்த, செல்லன்கொட்டாய் அருகே, பழமை வாய்ந்த கொடகாரி அம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு, நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று, நத்தம்காலனியை சேர்ந்த சிவராஜ் என்பவர், தன் மகனின் திருமண பத்திரிகையை, கொடகாரி அம்மன் கோவிலில் வைத்து வழிபட சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சிலர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிவராஜின் உறவினர்கள், கோவில் அருகே திரண்டதால், கோஷ்டி மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.இதனால், ஏ.எஸ்.பி., கல்யாண் தலைமையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.