பதிவு செய்த நாள்
04
நவ
2013
10:11
சென்னை: திருவல்லிக்கேணி, முருகன் திருவருட் சங்கத்தின், 60வது ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா, நாளை துவங்கி, வரும் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. நாளை துவங்கி, வரும் 7ம் தேதி வரை தினசரி, காலை 7:00 மணி முதல், பிற்பகல் வரை, முருகனுக்கு, அபிஷேக, ஆராதனைகளுடன் மகா ருத்ர ஜெபமும், ஷண்முக அர்ச்சனையும், மாலையில், இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.நாளை, காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன், விழா துவங்குகிறது. ருத்ர பாராயணம், ஈசான முகத்திற்கு, சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகள் உரையுடன் கூடிய, சுப்ரமண்ய புஜங்கம், சுப்ரமண்ய ஆறுமுக சகஸ்ர நாமாவளி ஆகிய இரு நுால்கள் வெளியிடப்படுகின்றன.நாளை மறுநாள், காலை தத்புருஷ முகத்திற்கு சகஸ்ர நாம அர்ச்சனை, மாலை, திருப்புகழ் பக்தி இன்னிசை ஆகியவை நடக்க உள்ளன.