பதிவு செய்த நாள்
04
நவ
2013
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நிறைவடையும் மறுநாள் கார்த்திகை திருவிழா நவ.,10ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவ. 3 காலையில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நவ., 7ல் வேல்வாங்குதல், நவ., 8ல் சூரசம்ஹாரம், நவ., 9ல் தேரோட்டம் நடக்கிறது. சஷ்டி நிறைவடையும் நவ., 9 மாலையில் கார்த்திகை திருவிழா தொடக்கமாக, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி நடக்கிறது. நவ., 10 காலையில் 8 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக நவ., 15ல் சைவ சமய ஸ்தாபித வராலற்று லீலையில், தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். நவ., 16ல் காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சிம்மாசனத்தில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்மன் வீதி உலாவும், நவ., 17ல் பட்டாபிஷேகம், மலைமேல் கார்த்திகை மகாதீபம் நிகழ்ச்சி, நவ., 18ல் தேரோட்டம், நவ. 19ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.