விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே, இரண்டு கோயில் கோபுரங்களில் இருந்த ஆறு கலசங்களை, மர்மநபர்கள் திருடிச்சென்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டியில் அனைத்து சமுதாயத்தாருக்கும் சொந்தமான சந்திவீரசாமி கோயில் மற்றும் ஆசாரி சமுதாயத்திற்கு சொந்தமான சுப்பிரமணியசாமி கோயில்கள் அருகருகே உள்ளன. நவ.,1 நள்ளிரவு, சந்திவீரசாமி கோயில் கோபுரத்தில் இருந்த நான்கு பித்தளை கலசம், சுப்பிரமணியசாமி கோயில் கோபுரத்தில் இருந்த இரண்டு பித்தளை கலசத்தை, மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.