ஆழ்வார்குறிச்சி: கடையம் வட்டார கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் மீனாட்சியம்பாள் கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சுவாமி, அம்பாள், நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தது. ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. கடையம் கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில், சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில், ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் சிவகாமியம்பாள் கோயில், நரசிங்கநாதர் ஆவுடையம்பாள் கோயில், சிவந்தியப்பர் சிவகாமியம்பாள் கோயில் உட்பட சுற்று வட்டார சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.