ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் பித்ரு தோஷங்களை போக்குவதற்காக மோட்ச தீபவழிபாடு நடந்தது. ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் அக்னி தீர்த்தக்கரை உள்ளது. இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி, சற்குருநாதர், சுவாமி தவபாலேஸ்வரர் ஜீவசமாதிபீடம் உள்ளது. இங்கு அமாவாசை நாளன்று காலை பித்ரு தோஷங்களை நீக்குவதற்காகவும், பித்ருக்கள் முக்தி பெறவும், அகஸ்தியர் ஜீவநாடியில் கூறியுள்ளபடி சித்தர்கள் முறைப்படி மோட்சதீப வழிபாடு நடந்தது.முன்னதாக சிறப்பு வழிபாடு, தொடர்ந்து மோட்சதீபம் ஏற்றப்பட்டது. மேலும் அமாவாசை நாள்தோறும் மோட்சதீப வழிபாடு நடப்பதால் அமாவாசை நாட்களில் மாலை 6 மணியளவில் நடக்கும் மோட்சதீப வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.