இறைவனை அருட்பெருஞ்ஜோதியாக(தீபவடிவம்) வழிபட்டவர் வள்ளலார். பசித்தோருக்கு உணவளிக்க வேண்டும் என்பதே இவரது கொள்கை. எனவே, வடலூரில் சத்திய சன்மார்க்கம் என்னும் நிறுவனத்தை அமைத்து, அன்னதானத்திற்கு வழிவகுத்தார். உணவு சமைப்பதற்காக இவர், ஏற்றிய அணையா அடுப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. தேடிய செல்வத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, ஏழைகளின் வயிறே ஏற்ற இடம் என்கிறார் வள்ளலார். அன்னதானத்தின் சிறப்பைத் திருவள்ளுவர், பசி ஒருவனின் உயிரை அழிக்கிறது. அதைப் போக்குவதே, நாம் பெற்ற செல்வத்தைப் பாதுகாக்க சிறந்த வழி என்று கூறுகிறார்.