பசி என்னும் கொடுமை, பாவிக்கு கூட வரக்கூடாது என்பார்கள். பசி என வந்தவருக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக உண்டான பண்பாடே விருந்தோம்பல். எல்லா உயிர்களுக்கும் சாப்பாடு குறைவின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அம்பிகையை அன்னபூரணியாக வழிபடுகிறோம். கேரளத்தில் செருக்குன்னம் என்ற ஊரில், அன்னபூர்ணா கோயில் இருக்கிறது. இங்கு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சாப்பாடு அளிக்கின்றனர். இங்குள்ள மரம் ஒன்றில், சோற்றை மூடையாகக் கட்டி வைத்துவிடுவர். இரவு நேரத்தில் பசியோடு வருபவன் திருடனாக இருந்தாலும், அவனும் பசியாற வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு ஏற்பாடு.