பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
புதுச்சேரி : கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலின், கந்தர் சஷ்டி விழாவில், யானைமுகா சூரன் சம்ஹாரம் நேற்று நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள, கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், 61ம் ஆண்டு, கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் திருக்கல்யாண விழா, கடந்த 3ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், யானைமுகா சூரன் சம்ஹாரம் நேற்று நடந்தது. வேல் வாங்கும் உற்சவம், சிங்கமுகா சூரன் சம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. நாளை காலையில், திருத்தேர் உற்சவம், இரவில், சூரசம்ஹார திருவிழா நடக்கிறது. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, சின்னக்கடையில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில், வரும் 9ம் தேதியன்று காலை, வள்ளி தேவசேனா சமேத கவுசிக பாலசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.