திட்டக்குடி : ராமநத்தம் செல்வ வினாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. ராமநத்தம் கிராமத்தில் செல்வ வினாயகர் கோவில் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று 7ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி 5ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், தனபூஜை, ரக்ஷராபந்தனம், கடஸ்தாபனம் முதல் கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. இன்று 7ம் தேதி காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி, 9:30 மணிக்கு யாத்திராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.