பதிவு செய்த நாள்
07
நவ
2013
10:11
திருவள்ளூர் : காக்களூர் சிவா - -விஷ்ணு கோவிலில் உள்ள சுப்ரமண்ய சுவாமி சன்னிதியில், வரும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.வரும், 9ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று காலை, 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் கணபதி பிரார்த்தனை, காசியாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல், ரக்ஷாபந்தனம், கன்னிகாதானம், திருமாங்கல்யதாரணம், சப்தபதி, லாஜஹோமம், தீபாராதனை நடைபெறும்.மதியம், 12.30 மணி அளவில் திருக்கல்யாண விருந்தும், மாலை, 5:00 மணிக்கு மேல், விசேஷ புஷ்பஅலங்காரத்துடன் தேரில் சுப்ரமண்ய சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.