திருச்சானூர்: பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நவம்பர் 29ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு அன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் வீதி உலா நடைபெற உள்ளது. நவ. 30-ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகனமும் இரவு அன்னபட்சி வாகனத்திலும் வீதி உலா. டிசம்பர் 1-ஆம் தேதி காலை முத்துபந்தல் வாகனத்திலும் இரவு சிம்ம வாகனம், 2-ஆம் தேதி காலை கல்பவிருக்ஷ வாகனம், இரவு அனுமந்த வாகனம். 3-ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவமும் மாலை வசந்தோத்ஸவம் இரவு அனுமந்த வாகனத்திலும் சேவை சாதிக்கிறார்.