கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயிலில் 11 திருக்குடைகள் ஒப்படைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 11 திருக்குடைகள், வியாழக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீஅருணாசலா ஆன்மிக சேவா சங்கம் சார்பில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 9-வது ஆண்டாக திருக்குடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.