ராஜபாளையம்: மாயூர நாத சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடந்தது. மாலையில் கோயில் முன் உள்ள திடலில் முருகன் சூரனை வதம்செய்யும் சூர சம்ஹார நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. அதுபோல் சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாலையில் உற்சவர் சண்முகர் வீதி உலா வந்து சூரனை வதம் செய்யும் சூர சம்ஹார நிகழ்ச்சி ரத வீதிகளில் நடைபெற்றது.