பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
அரியலூர்: அரியலூர் அருகே வாரணவாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஸ்ரீ சீரடி ஆனந்த சாயிபாபா கோவில் கும்பாபிஷேகம் வரும், 14ம் தேதி வியாழக்கிழமை காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று காலை, கோபூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாளான இன்று ஆனந்த சாயி பிரதிஷ்டை, யாகசாலை பூஜைகள் விசேஷசந்தி, கஜபூஜை, மூலமந்திர சாய் ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடக்கிறது. மூன்றாம் நாளான நாளை காலை, ஆனந்தசாயி கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சீரடி சாய் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் ராஜா சந்திரசேகர், செயலாளர் ராஜா ஜோஸ்யர் என்கிற ராசாங்கு பொருளாளர் அக்பர் ஷெரீப், டிரஸ்ட் நிர்வாகிகள் ராஜசேகரன், ஜூவல்லரி கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் தியாகராஜன், டாக்டர் சுசீலா, செங்குட்டுவன், சுதாகர், கோவை ஜெயஸ்ரீ, செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.