மஞ்சூர்: அன்னமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நிகழ்ச்சியையொட்டி, காலை கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து 12:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சி மேள தாளத்துடன் சிறப்பாக நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்தவுடன் நடந்த மொய் வைக்கும் நிகழ்ச்சியில்,பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மொய் வைத்தனர். மாலை 5:00 மணியளவில் தேவசேனை, வள்ளி சமேத சுப்ரமணியசுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.