பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
பெரியதாழை: சாத்தான்குளத்திலிருந்து வரும் 16ம் தேதி ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி திருச்செந்தூருக்கு அகில பாரத இந்து மகாசபா சார்பில் நடைபயணம் நடக்கிறது.சாத்தான்குளம் வண்டி மலைச்சியம்மன் கோயில் முன்பிருந்து வரும் 16ந் தேதி துவங்கும் நடைப்பயணத்திற்கு மாவட்ட கௌரவ ஆலோசகர் செல்லத்துரை பாண்டியன் தலைமை வகிக்கிறார். மாநில அகில பாரத இந்து மகாசபாத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசுகிறார். தூத்துக்குடி மகாசபா நகர தொழிலாளரணித் தலைவர் சங்கர் நடைப் பயணத்தை காவி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். மாநில பொதுச் செயலாளர் முத்தப்பா, மாநிலச் செயலாளர்கள் பொன்வெற்றிவேல், புருஷோத்தம்மன், தென்மண்டலச் செயலாளர் சுப்புராஜ், மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபயணத்தை வழி நடத்தி செல்கின்றனர்.இந்த நடைபயணத்தில் உடன்குடி ஒன்றியத் தலைவர் சதீஸ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் பம்பைபாலன், கயத்தாறு ஒன்றிய இளைஞரணித் தலைவர் கணேஷ்குமார், கோவில்பட்டி நகர பொதுச் செயலாளர் மாரியப்பன், நகரத் தலைவர் வெங்கடராமன், ஏரல் நகரத் தலைவர் ராமர், நகரச் செயலாளர் சுப்பையா, உட்பட மாவட்டத்திலுள்ள சபா நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். சாத்தான்குளத்தில் இருந்து புறப்படும் நடைப்பயணம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சென்றடைகிறது.