பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
உளுந்தை: உளுந்தை கிராமத்தில் உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலில், முதலாம் ஆண்டு, திருப்பவித்ரோத்ஸவம், நேற்று துவங்கியது. கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட உளுந்தை கிராமத்தில், வேங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், 2008ம் ஆண்டு, புனரமைக்கப்பட்டது. இங்கு, முதலாம் ஆண்டு, திருப்பவித்ரோத்ஸவம், நேற்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாளான, நேற்று மாலை, பெருமாளுக்கு விசேஷ ஆராதனையும், அங்குரார்பணமும், பவித்ர பிரதிஷ்டையும் நடந்தது. இன்று, காலை, 7:30 மணி முதல், 11:30 மணி வரை அக்னி பிரதிஷ்டையும், கும்பாவாஹனமும், மூர்த்தி ஹோமமும், பூர்ணாஹூதியும் நடைபெறும். மாலை, 4:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை, புண்யாஹவாசனமும், மகா பூர்ணாஹூதியும், கும்ப புறப்பாடும், மஹதாசீர்வாதமும், சாற்று மறையும் நடைபெறும்.