பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
கொரட்டூர்: கொரட்டூரில், சிதிலமடைந்த கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளவேடு அடுத்த கொரட்டூர் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 67 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லை இந்த பள்ளி அருகே, பாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கரைகள் சிதிலமடைந்து சுற்றுச்சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில்... இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா கூறியதாவது: கோவில் குளம் சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, அரசிடம் மனு கொடுத்து உள்ளோம். அரசிடமிருந்து நிதி வந்தவுடன், சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.