தஞ்சாவூர்: பெரியகோவில் தேர் செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் பார்வையிட்டார். தஞ்சை பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்ய ரூ.50 லட்சம் நிதியை தமிழகஅரசு ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து பெரியகோவில் தேர் செய்யும் பணி தஞ்சை மேலவீதியில் உள்ள கொங்கணேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.