பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
மதுரை: திருப்பரங்குன்றத்தில், நவ., 17ல் கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாலகிருஷ்ணன் எஸ்.பி., தெரிவித்துள்ளதாவது: குற்றங்களை தடுக்க, ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். "மப்டியில் போலீசார் கண்காணிப்பர். கோயில் உள்ளே, வெளியே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நெரிசலை தவிர்க்க, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசாருடன், ஊர்க்காவல் படை, என்.எஸ்.எஸ்., போலீஸ் நண்பர்களும் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவர். சன்னதி தெருவில், ரோட்டோர கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.