மெய்கண்டார் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமிதரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 12:11
சிதம்பரம் மாலைக்கட்டி தெருவில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜபெருமான் கோவில், மெய்கண்டார் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 13–ந் தேதி காலை கணபதிஹோமம், பூர்வாங்க பூஜைகள், முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இதையடுத்து, கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 2–ம் கால பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் விமானத்திற்கு எடுத்து வரப்பட்டது. கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.