மேட்டுப்பாளையம் காரமடை ரோடு சுந்திராபுரத்தில் சித்தி வலம்புரி விநாயகர் கோவில் கருவறையில் சிற்ப சாஸ்திரங்கள் முறைப்படி மானம் அமைத்து, திருப்பணிகள் தொடங்கி முடிவடைந்தது.வருகிற 20–ந் தேதி(புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தெய்வ திருமேனிக்கு காப்பு அணிவித்தல், 2–ம் கால வேள்வி பூஜை, 108 மூலிகை பொருட்கள் வேள்வி, காலை 6.30 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து விமானம் மற்றும் வலம்புரி விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.